சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படத்தை இயற்றியதன் மூலம் திரையுலகின் கவனத்தைப் பெற்ற ஞானவேலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்கும் பட வாய்ப்பு கிடைத்தது.
‘வேட்டையன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘வேட்டையன்’ படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து இன்னும் சில மாதங்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தை முடித்தவுடன் ஞானவேல் இயக்கும் படம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
அவரது அடுத்த படத்தில் பிரபல நடிகர் நானி நடிக்க உள்ளார். இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் ‘வேட்டையன்’ படம் ரிலீசுக்கு பிறகு அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்தப் படத்தை உருவாக்க ஞானவேல் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் நானி தற்போது ‘சரிபோதா சனிவாரம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இதையடுத்து ஞானவேல் படத்தில் நானி இணைவார் என கூறப்படுகிறது.
– தேஜேஷ்
#இயக்குநர்_ஞானவேல் #Director_Gnanavel #நடிகர்_நானி #Actor_Nani #சரிபோதா_சனிவாரம் #Saribodha_Sanivaaram #ரஜினிகாந்த் #Rajinikanth #வேட்டையன் #Vettaiyan