ஜூனில் வெளியாகும் தனுஷின் 50வது படம்!

நடிகர் தனுஷின் மைல்கல்லான 50வது படம் இந்த வருடம் திரைக்கு வர தயாராகி வருகிறது. ‘ராயன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இது வட சென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் பழிவாங்கும் நாடகம் என்று கூறப்படுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி இந்திய அளவில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘ராயன்’ படத்தின் டீஸர் தமிழ் புத்தாண்டான வரும் 14-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் தனுசுடன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை தனுஷ் இயக்கியுள்ளார். ராயன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார்.

கலாநிதி மாறன் தனது சன் பிக்சர்ஸ் பேனரில் ‘ராயன்’ படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி சென்னையில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment