நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக தனுஷ் 1 கோடி ரூபாய் நிதி!

கமல்ஹாசன், தளபதி விஜய், சிவகார்த்திகேயன், நெப்போலியன் போன்ற பிரபலங்களின் முக்கியப் பங்களிப்புகளின் பட்டியலில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தனுஷ் நன்கொடை அளித்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட உதவும் திட்டத்திற்கு கமல்ஹாசன், தளபதி விஜய் மற்றும் நெப்போலியன் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயனும் ஐம்பது லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடிகர் சங்கத்தின் கட்டிடத் திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் பணத்தைக் கொடுத்தார்.

அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– தேஜேஷ்

 

Comments (0)
Add Comment