விக்ரம் நடிக்க இருக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் மூன்று நிமிடம் முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.
இதனிடையே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய வீடியோவை படக்குழுவினர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் படப்பிடிப்புக்கு வரும் விக்ரம் முதலில் கேரவன் செல்வது போன்றும், அதன்பின் படப்பிடிப்புக்கு வரும் துஷாரா விஜயன் கேரவனுக்கு செல்வது போன்றும் இருவரும் மேக்கப் போட்டு விட்டு திரும்பி வந்தவுடன் முதல் காட்சியை இயக்குனர் அருண்குமார் படமாக்கியதும் இந்த வீடியோவில் உள்ளது.
இதனை அடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகக் குறைந்த நாட்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடிக்க உள்ளனர்.
மேலும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதால் அவருடைய காட்சியின் படப்பிடிப்பு விரைவில் படமாக்கப்பட உள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படத்தை ஹெச்ஆர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படம் விக்ரம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையப்போகிறது.
– தேஜேஷ்