தக் லைஃப்: ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்!

இயக்குநர் மணிரத்னமும், கமல்ஹாசனும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து கமலும், மணிரத்னமும் தயாரிக்கும் இந்த படத்தின் ‘ஷுட்டிங்’ சென்னையில் சில நாட்கள் நடைபெற்றது.

பின்னர் கமல்ஹாசன் சொந்த வேலை காரணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு செர்பியா நாட்டில் நடப்பதாக இருந்தது. படக்குழு அந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. பனிப்பொழிவில் மணிரத்னம், ‘ஷுட்டிங்’ நடத்திய போட்டோக்கள் வெளியானது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டிருப்பதால், செர்பியா செல்லவில்லை.

இதனால், ‘ஷுட்டிங்’கை பாதியில் நிறுத்தி விட்டு, படக்குழு, சென்னை திரும்பிவிட்டது. தேர்தல் முடிந்த பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.

படப்பிடிப்பு தாமதமாவதால் ‘கால்ஷீட்’ பிரச்சினை காரணமாக இந்தப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகினார். தேதிகள் பிரச்சினை காரணமாக ஜெயம் ரவியும் ஒதுங்கி கொண்டார்.

துல்கர் சல்மானுக்கு பதில் நடிகர் சிம்பு இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஜெயம் ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அருண் விஜய் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் அவர் நடிக்க உள்ளார். சிம்புவும், அருண் விஜயும் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் ’செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி.

#இயக்குநர்_மணிரத்னம் #Director_Manirathnam #கமல்ஹாசன் #KamalHaasan #தேர்தல்_பிரச்சாரம் #Election_Campaign #தக்_லைஃப்_படப்பிடிப்பு #Thug_Life_Shooting #நடிகர்_சிம்பு #Actor_Simbu #அருண்_விஜய் #Arun_vijay #வணங்கான்

கமல்ஹாசன்சிம்புமணிரத்னம்வணங்கான்
Comments (0)
Add Comment