பிரபுதேவாவின் ARR-PD6 படப்பிடிப்பு நிறைவு!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடனப்புயல் பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ARRPD6 படத்திற்காக இணைந்துள்ளனர்.

பிகைண்ட்வுட்ஸ் தயாரிப்பில் மனோஜ் என்எஸ் இயக்கத்தில் பிரபுதேவா, யோகி பாபு, அஜீ வர்கிஸ், அர்ஜீன் அசாகன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் ரெடின் கிக்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, லொல்லுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 1994-ம் ஆண்டு காதலன் படத்தின் மூலம் இணைந்தார்கள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

இந்தத் திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணையும் 6வது படமாகும்.

இதற்கடுத்து லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு ஆகியப் படங்களும் இவர்களது கூட்டணியில் வெற்றி பெற்றது. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்ததுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Comments (0)
Add Comment