சென்னை அணிக்காக ஒன்றிணைந்த அனிருத் – ஜடேஜா!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகிய இருவரும் இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கிய நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியை சிஎஸ்கே அணி வீழ்த்தியது.

இன்று மாலை குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மோத இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி சென்னையில் தான் தங்கி உள்ளது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படம் எதற்காக இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னை அணிக்கான சிறப்புப் பாடலை அனிருத் கம்போஸ் செய்ய இருக்கின்றாரா? அல்லது அனிருத், ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து ஏதாவது விளம்பர போட்டோஷூட் நடக்கிறதா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment