சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் உருவான ‘அரண்மனை 4’ திரைப்படம் வரும் மே 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் போட்டி போட்டு ஆடிய பாடல் காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
இதனிடையே இந்தப் படத்தில் நடிக்கும் போது தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் ரோப் கட்டி அந்தரத்தில் தொங்கும் காட்சியின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் படத்திற்காக தமன்னா இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்துள்ளாரா என்று ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தப் பதிவில் தமன்னா ‘அரண்மனை 4’ திரைப்படம் ரசிகர்களை அலற வைத்து பயமுறுத்தும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இந்தப் படத்திற்கு பின் உள்ள சில இனிமையான தருணங்களை உங்களுக்கு பகிர்ந்து உள்ளேன். இந்தப் படத்தில் பணி புரிந்தது சவால் ஆனதாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
உண்மையில் இந்த ஸ்டண்ட்களை எல்லாம் நானே ரிஸ்க் எடுத்து செய்து முடித்தேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
– தேஜேஷ்