33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் நடிக்கும் ஷோபனா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ திரைப்படத்தில் நடித்த நடிகை மீண்டும் ரஜினி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ‘தலைவர் 171’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் ஆரம்ப கட்டப் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘தலைவர் 171’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கடந்த 90களில் பிரபல நடிகையாக இருந்த ஷோபனா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

1991 ஆம் ஆண்டு வெளியான ‘தளபதி’ திரைப்படத்தில் ரஜினியுடன் ஷோபனா நடித்திருப்பார்.

இந்த நிலையில் ‘தளபதி’ படத்திற்கு பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் ஷோபனா நடிக்க இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் வரும் 22ஆம் தேதி இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாக உள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment