நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பேபி ஜான்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அதேபோல் இன்னொரு படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து உள்ளதால் இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அட்லி தயாரிப்பில் உருவாகி வரும் ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வந்தார் என்பதும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து அதன் நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.
இதனிடையே அடுத்த கட்டமாக கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள நிலையில் இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கியக் கேரக்டரில் நடித்து வந்த ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சென்றாயன், சூப்பர் சுப்பராயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு தினேஷ் கிருஷ்ண ஒளிப்பதிவும், பிரவீன் கேஎல் படத்தொகுப்பு பணியைச் செய்து வருகின்றனர்.
‘பேபி ஜான்’, ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தற்போது இரு படங்களின் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தின் ப்ரோமோஷன் குறித்த தேதிகள் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு படங்களையும் திரையில் காண கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வாழ்த்துகள் கீர்த்தி சுரேஷ்.
– தேஜேஷ்