எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஜோதிகா!

நடிப்பில் சிகரத்தை அடைந்தவர்கள் என்று நாம் சொல்வதுண்டு. ஆனால் நிஜமாகவே நடிகை ஜோதிகா எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை ஜோதிகா அவ்வப்போது சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவார். சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைவது, அங்குள்ள ஒரு சிறிய வீட்டில் தங்கியிருப்பது, ட்ரக்கிங் செல்வது, பனி மழையில் நனைவது, உலகின் மிகச் சிறிய ரன்வே கொண்ட விமான நிலையத்தை அடைவது உள்ளிட்டக் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.

இதுவரை வேறு எந்த நடிகையும் செய்யாத புதிய முயற்சி செய்த ஜோதிகாவின் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நடிகை ஜோதிகா நடித்த ‘சைத்தான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அவர் ‘ஸ்ரீகாந்த்’ உட்பட இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment