சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான ‘சிங்கம்’ திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் ஆகியவை கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் வெளியானது என்றும் மூன்றுமே சூப்பர் ஹிட் ஆனது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருந்த நிலையில் திடீரென அந்தப் படம் டிராப் ஆனது.
இதனால் மீண்டும் இருவரும் இணைய வாய்ப்பில்லை என்றும், ‘சிங்கம் 4’ உருவாவது கடினம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ‘ரத்னம்’ என்ற படத்தை ஹரி இயக்கி முடித்துள்ள நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் “நான் எங்கே சென்றாலும் சிங்கம் நான்காவது பாகம் குறித்து கேட்கிறார்கள்.
அந்தப் படம் ஹாட்ரிக் ஹிட் அடித்த படம் என்பதால் அடுத்த பாகத்திற்கு நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. ‘சிங்கம் 4’ உருவாவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்’ என்று அவர் தெரிவித்தார்.
– தேஜேஷ்