பாகுபலியை மிஞ்சும் கங்குவா க்ளைமாக்ஸ்!

ஹாலிவுட்டில் ஏராளமான போர் வீரர்களை வைத்து பெரும் பொருட்செலவில் போர் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும். இந்தியாவைப் பொறுத்த வரை போர் காட்சிகள் என்றால் `பாகுபலி’ படத்தின் போர்க்காட்சிகள் தான் ஞாபகம் வரும்.

இந்த நிலையில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ திரைப்படத்தின் கிளைமாக்ஸில் வரும் போர்காட்சியில் 10,000 போர் வீரர்கள் கலந்து கொண்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிய ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் சூர்யா மற்றும் பாபிதியோல் இடையே நடக்கும் ஒரு போர் காட்சியில் 10,000 துணை நடிகர்களை கொண்டு படமாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சர்வதேச படங்களுக்கு இணையான காட்சிகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தப் படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்க்கக்கூடிய படங்களில் ஒன்றாக ‘கங்குவா’ படம் இருக்கும். இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

சூர்யாவின் திரையுலக வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் அமைய உள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபிதியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், கேஎஸ் ரவிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் பாத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment