அஜித் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். அதன் பின்னர் அஜித் நடிக்கும் படத்தை அவர் இயக்க முயற்சித்தும் அது இன்று வரை முடியவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ‘ரெட்ட தல’ என்ற டைட்டிலை வைத்திருந்த நிலையில் அந்த டைட்டிலை தற்போது அருண் விஜய்யின் அடுத்த படத்திற்காக கொடுத்துள்ளார்.
தனது உதவியாளர் திருக்குமரன், அருண் விஜய்யை வைத்து இயக்கும் படத்திற்காக அந்த டைட்டிலை ஏ.ஆர் முருகதாஸ் கொடுத்துள்ளார்.
சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் அருண் விஜய், சித்தி இத்யானி, தன்யா ரவிச்சந்திரன், பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.
– தேஜேஷ்