வெளியானது ‘டிஎன்ஏ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் அதர்வாவின் வரவிருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இவர் இதற்கு முன் ‘ஒரு நாள் கூத்து,’ ‘மான்ஸ்டர்,’ மற்றும் ‘பர்ஹானா’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசனுடன் இணைந்துள்ளார்.

‘டிஎன்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார். போஸ்டரில் ஹீரோவின் கடுமையான தருணம் மற்றும் காதல் இடம்பெற்றுள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் படத்தை தயாரித்துள்ளார். ‘டிஎன்ஏ’ விரைவில் திரைக்கு வர உள்ளது.

பார்த்திபன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக வி.ஜே.சாபு ஜோசப், கலை இயக்குநராக சிவசங்கர், ஸ்டண்ட் இயக்குநராக டான் அசோக் மற்றும் நடன இயக்குநராக தினேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment