‘வேட்டையனி’ன் மாஸ் இண்ட்ரோ பாடல்!

கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் இண்ட்ரோ பாடல்கள் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

ரஜினிகாந்த் படம் என்றாலே முதலில் இண்ட்ரோ பாடல் இருக்கும் என்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் ‘வேட்டையன்’ படத்தில் ஒரு மாஸ் இண்ட்ரோ பாடல் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் பாடலின் படப்பிடிப்பு வரும் 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாகவும், இதற்காக பிரமாண்டமான செட் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தப் பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிய இருப்பதாகவும் ஏராளமான நடனக் கலைஞர்கள் இந்தப் பாடலில் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஈசிஆர் பகுதியில் நடைபெற்று வருவதாகவும், ரஜினிகாந்த் மற்றும் ராணா டகுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

வரும் அக்டோபர் மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா ரகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில், ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணியைச் செய்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* தேஜேஷ்

Comments (0)
Add Comment