ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘ராமாயணம்’!

இதிகாசப் புராணங்களில் ஒன்றான ‘ராமாயணம்’ படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தில் ராமர் கேரக்டரில் நடிக்கும் ரன்பீர் கபூர், தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டு ராமாயணம் படத்திற்காக போடப்பட்ட செட்டை காண்பித்துள்ளார்.

படப்பிடிப்பின் முதல் நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கி உள்ளதாகத் தெரிகிறது.

ராமர் கேரக்டரில் ரன்பீர் கபூர், சீதை கேரக்டரில் சாய் பல்லவி மற்றும் ராவணன் கேரக்டரில் யாஷ் நடிக்கும் இந்தப் படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும், தற்போது போடப்பட்டிருக்கும் செட் மட்டுமே 11 கோடி மதிப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் படம் மூன்று பாகமாக உருவாக இருக்கிறது. ராமரின் இளமை பருவம், சீதை திருமணம், சீதை இலங்கைக்கு கடத்தல் ஆகிய மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியத் திரை உலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment