ஜெயம் ரவி இயக்கும் படத்தில் நாயகனான யோகி பாபு!

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராகத் திகழுபவர் ஜெயம் ரவி. தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரதர்.

எம்.ராஜேஷ் இயக்கிய இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகவுள்ளது.

இதற்கிடையில் ஜெயம் ரவி, ஜுனி, காதலிக்க நேரமில்லை சில படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் ஜெயம் ரவி அளித்த நேர்காணல் ஒன்றில், தனக்கு படங்களை இயக்குவதில் ஆர்வம் உள்ளது எனவும் மிகவும் விருப்பமான ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக யோகி பாபுவை நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னால் ‘கோமாளி’ படத்தின் மூலம் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். கலவையான விமர்சனப் பெற்றிருந்தாலும் ரசிகர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாகவே அமைந்தது.

இதற்கிடையில், ஜெயம் ரவி தனது 34-வது படமான ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தினருடன் மீண்டும் பணியாற்ற உள்ளார்.

சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ஜெ ஆர் 34’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார்.

இந்தப் படம் முடிந்தவுடன், யோகி பாபுவை வைத்து தனது முதல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான அடுத்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது.

Comments (0)
Add Comment