நடிகர் விஜய் தேவரகொண்டா – நடிகை ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் தென்னிந்தியத் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். அதைத் தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது இருவரும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், காதலர்கள் தம்பதிகளாக மாறியுள்ள நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாவில் தன் கணவர் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“என்னுடைய அன்பர்களே… என்னுடைய கணவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். மிஸ்டர் விஜய் தேவரகொண்டா. அவர் தான் எனக்கு உண்மையான அன்பு எப்படியிருக்கும் என்பதை உணர வைத்தார்.
அவர் தான் அமைதி எப்படி இருக்கும் என்பதை உணர வைத்தார். பெரிய கனவுகளைக் காண்பதில் எந்தத் தவறுமில்லை என்பதை தினமும் என்னிடம் சொன்னவர்.
நான் நினைப்பதைவிட உயரங்களை அடைய முடியும் என்பதை என்னிடம் அடிக்கடி நினைவு கூறியவர். என்னுடைய நடனங்களைத் தடுக்காதவர்.
நண்பர்களுடன் பயணப்படுவதே சிறந்த விஷயம் என்பதை எனக்கு உணர்த்தியவர்.
நம்புங்கள் அவரை பற்றி என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும்.
நான் எப்படிப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும் என கனவு கண்டேனோ அப்படியான பெண்ணாக நீ என்னை மாற்றினாய்.. உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவளாய் உணர்கிறேன்.
உன் மீதான என் உணர்வுகளை விவரிக்க எப்போதும் வார்த்தைகளின்றி தவிக்கிறேன் விஜூ. இதை நான் உன்னிடம் பலமுறை கூறியிருக்கிறேன்.
திடீரென என்னுடைய சாதனைகள், சிரமங்கள், மகிழ்ச்சி, சோகம், வாழ்க்கை எல்லாத்துக்கும் அர்த்தம் கிடைத்துள்ளது.
இவை எல்லாவற்றையும், நேரில் பார்த்து, அதில் மிகப்பெரிய பங்கு வகித்திருக்கிறாய்.
உன் மனைவியாக இருக்கப் போகிறேன் என நினைக்கும்போது உற்சாகம் பிறக்கிறது.
உன் மனைவியாக இருப்பதும், உன் மனைவி என அழைக்கப்படுவதும் எல்லாமே கொண்டாட்டம் தான். சிறந்த வாழ்க்கையை வாழ்வோம்” என தெரிவித்துள்ளார்.
இல்வாழ்க்கைப் பயணம் இனிமையாகத் தொடர இனிய வாழ்த்துகள்.