தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ரோகிணி, முற்போக்கு பேச்சாளரும் கூட.
தற்போது நடிகை என்பதைத் தாண்டி அவர் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
அவள் = அவன்?’ என்ற 40 எபிசோட்கள் கொண்ட குட்டி வெப் தொடர், ‘கதை ஷார்ட்ஸ்’ செயலியில் வெளியாகி இருக்கிறது.
திருமணம் நடைபெற 2 வாரமே இருக்கும் நிலையில் முதலிரவு பற்றிய தனது எதிர்பார்ப்பு குறித்து மணமகன் எழுதிய கடிதம், மணமகளுக்கு கிடைத்துவிட அதன்பிறகு நடக்கும் களேபரங்கள் தான் இப்படத்தின் கதை.
இதுகுறித்து ரோகிணி கூறுகையில், நடிகை என்பதைத் தாண்டி இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பது மகிழ்ச்சி.
கடந்த சில காலமாகவே இதற்காக என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டேன். நல்ல அறிமுகம் தேவை என்பதால் உரிய காலத்துக்கு காத்திருந்தேன். இப்போது அது நடந்திருக்கிறது.
ஓ.டி.டி., சின்னத்திரை, வெள்ளித்திரை என்பதெல்லாம் நான் பார்ப்பதில்லை. சினிமா என்பது சினிமா தான்.
இது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான புரிதலைப் பேசும் படம் என்பதால், மிகவும் எச்சரிக்கையாக திரைக்கதை எழுதியுள்ளேன்.
இது தவிர, இன்னும் 3 கதைகள் எழுதியுள்ளேன். விரைவில் ‘அப்பாவின் மீசை’ என்ற எனது படம் வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது.
எனது புதிய முயற்சிக்கு ரசிகர்கள் ஊக்கம் தருவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.