விக்டரி வெங்கடேஷின் 75-வது படமாக உருவாகி வரும் சைந்தவ் படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது.
ஹிட்வெர்ஸ் படத்தை இயக்கிய சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
சைந்தவ் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. பல்வேறு முன்னணி நடிகர்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, இப்படத்தில் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பாலிவுட்டைச் சேர்ந்த பன்முகத் தன்மை கொண்ட நடிகரான நவாசுதீன் சித்திக், சைந்தவ் படத்தில் விகாஸ் மாலிக் கதாபாத்திரம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் நாயகியாக மனோயா என்ற கதாபாத்திரத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் நடத்துள்ளார்.
இவர்களுடன் ருஹானி ஷர்மா டாக்டர் ரேனுவாகவும், ஆன்ட்ரியா ஜெர்மியா ஜாஸ்மின் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை எஸ்.மணிகண்டன் மேற்கொண்டுள்ளார்.
படத்தொகுப்புப் பணிகளை கேரி பி.ஹெச். மேற்கொள்ள, புரோடக்ஷன் டிசைனராக அவினாஷ் கொல்லாவும் இணை தயாரிப்பாளர் கிஷோர் தல்லூர் பார்த்துக் கொள்கின்றனர்.