வெளியானது ‘வணங்கான்’ படத்தின் முதல் தோற்றம்!

அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இதில் சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கவிஞர் வைரமுத்து படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதி உள்ளார்.

பாலா – சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த இத்திரைப்படத்தில் இருந்து சில காரணங்களால் விலகுவதாக சூர்யா கடந்த ஆண்டு அறிவித்தார். சூர்யா படத்திலிருந்து விலகியதை அடுத்து, நடிகை க்ரித்தி ஷெட்டியும் விலக்கப்பட்டார்.

அவர்களுக்கு பதிலாக அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தமாகி படப்பிடிப்பு நடைபெற்றது‌. இந்நிலையில் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

சேறு சகதியுடன் தோன்றும் நடிகர் அருண் விஜய் வலது கையில் பெரியார் சிலையையும் இடது கையில் விநாயகர் சிலையும் வைத்துள்ளபடி போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment