ஒரே நாளில் வெளியாகும் 8 படங்கள்!

வருடத்தின் கடைசி மாதமான டிசம்பரில் நிறைய தமிழ் படங்கள் வெளியாவது வழக்கம்.

இந்த மாதம் 1 ஆம் தேதி 5 படங்கள் ரிலீஸ் ஆனது. 8 ஆம் தேதியும் 5 படங்கள் வெளியானது. வரும் 15 ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) 8 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.

‘உறியடி’ விஜயகுமார் நடிப்பில் உருவாகி உள்ள ஃபைட் கிளப், அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள சபாநாயகன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட நான்கு நாயகிகளை மையமாக வைத்து தயாராகியுள்ள கண்ணகி, வைபவ் நடித்துள்ள ஆலம்பனா ஆகியவை முக்கியப் படங்கள்.

இது தவிர தீதும் சூதும், அகோரி, பாட்டி சொல்லைத் தட்டாதே, ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆகிய திரைப்படங்களும் அன்றைய தினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணகி படத்தை அறிமுக டைரக்டர் யஷ்வந்த் கிஷோர் இயக்கி உள்ளார். இவர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர்.

மழை காரணமாக கடந்த வாரம் சில நாட்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகும் 8 படங்களும் ஓரளவு வசூல் தரும் என்ற நம்பிக்கையில், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளனர்.

-பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment