மனித உணர்வுகளைப் பேசும் ‘திரு. மாணிக்கம்’!

“எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள ‘திரு. மாணிக்கம்’ திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27-ம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக “தேவைக்கு கிடைக்காததும்… தேவைக்கு அதிகமாக கிடைக்கிறதும் எப்பவுமே ஒரு வலிதான்…” என பாரதிராஜா குறிப்பிடும் வசனம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தி வைரலாகிக் கொண்டு வருகிறது.

திரு. மாணிக்கம் படத்தை மாஸ்டர் பீஸ் என்ற நிறுவனம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் பெருவாரியான திரையர‌ங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

ZEE தொலைக்காட்சி நிறுவனம் திரைக்கு வரும் முன்னரே திரு. மாணிக்கம் திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிடவிருக்கிறார்கள்.

‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குநர் நந்தா பெரியசாமி திரு. மாணிக்கம் திரைப்படத்தை விறுவிறுப்பான திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.

ஆதங்கம்… ஆற்றாமை… தவிப்பு… தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார்.

ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜாவும் நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள்.

இவர்களுடன் அனன்யா, தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு.. ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.

‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்திலும் கவரவிருக்கிறார்.

நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை வைத்து ஹங்கேரியில் பின்னணி இசையை இரவு பகல் பாராது உயிரோட்டத்துடன் உருவாக்கியுள்ளார்.

பாடலாசிரியர்கள் சினேகன், ராஜு முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான இத்திரைப்படத்தை ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

#GPRK_சினிமாஸ் #P_சமுத்திரக்கனி #P_Samuthirakani #திரு_மாணிக்கம் #Thiru_Manickam #நந்தா_பெரியசாமி #Nandha_periyasamy #பாரதிராஜா #Bharathiraja #மாஸ்டர்_பீஸ்_நிறுவனம் #Master_Piece_production # ZEE_தொலைக்காட்சி #ஒளிப்பதிவாளர்_மைனா_சுகுமார் #Cameraman_Myna_sugumar #நாசர் #Nasser #அனன்யா #Ananya #தம்பி_ராமையா #Thambi_ramaiah #வடிவுக்கரசி #vadivukarasi #இளவரசு #Ilavarasu #இசையமைப்பாளர்_விஷால்_சந்திரசேகர் #Musicdirector_Vishal_chandrasekar

Comments (0)
Add Comment