மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதித் தயாரித்திருக்கும் படம் “99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு”.
இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர்.
பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், பி.எல்.தேனப்பன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்ட அரங்கில் நடைபெற்றது.
அதோடு, மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் “ஹஸ்கி ஹவுஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு;
“ஒரே மேடையில் மூன்று விழா நடத்துவது இங்கு தான் பார்க்கிறேன்.
ஆர்.வி.உதயகுமார் இயக்குநர் சங்க தலைவரா? இல்லை ரக்ஷிதா ரசிகர் மன்ற தலைவரா எனத் தெரியவில்லை. அந்தளவு தீவிர ரசிகராக இருக்கிறார்.
ரக்ஷிதா எந்த கதாப்பாத்திரம் தந்தாலும் அப்படியே மாறிவிடுகிறார்.
பேய்ப்படம் என நினைத்தால், பாடல் எல்லாம் பக்திப்படம் போல உள்ளது. பிள்ளையார் பாடல், கருப்பண்ண சாமி பாடல், புத்தர் பாடல் எல்லாம் பயங்கர என்ர்ஜியாக உள்ளது.
அமைதிக்கான கடவுள் புத்தர், அவரைப் பற்றி தமிழ் சினிமாவில் அதிகம் வரவில்லை. இப்படத்தில் வந்துள்ளது மகிழ்ச்சி. மூர்த்தி அவர்களின் தன்னம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் இப்படம் பெரிய வெற்றி பெறும்.”
இயக்குநரும் தயாரிப்பாளருமான மூர்த்தி பேசியவை;
“நான் சினிமாவுக்கு புதியவன். எனக்கு தெரிந்ததை, என் அறிவை வைத்து, மிக எளிமையாக இப்படத்தை எடுத்துள்ளேன்.
அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் – சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படக்குழு படமாக்கியுள்ளது.
படத்தில் AI-CG – காட்சிகள் நவீன தொழில்நுட்பத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக வடிமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.”
இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையாள, ஜெயமுருகன் கலை இயக்கத்தைச் செய்துள்ளார்.
நடன இயக்குநர்களாக ஸ்ரீதர் – ஆனந்த் இருவரும் பணியாற்றியுள்ளனர்.
பயர் கார்த்திக் பரபரப்பான சண்டைக் காட்சிகளை உருவாக்கியுள்ளார்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, தயாரித்து, இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.