அக்டோபரில் வெளியாகிறது ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’!

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் கதை ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’.

இந்தக் கதைக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.

மிக ஆபத்தான பிளேயர்ஸ் தங்கள் முகத்தை எப்போதும் வெளியே காட்ட மாட்டார்கள். முகமூடிக்கு பின்பு தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு நடக்கும் குழப்பங்களை கவனிக்கிறார்கள்.

அக்டோபர் 2 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகும் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடர், ஹைப்பர் கனெக்டட் உலகின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நகரும் 2025-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் தமிழ் சீரிஸ் ஆகும்.

ரகசியங்கள் நழுவி, அழுத்தத்தை மீறி நம்பிக்கை உடைக்கப்படும்போது அடையாளமும் அதிகாரமும் வெளிப்படுகிறது என்பதே கதையின் சாரம்.

இந்த வருடம் வெளியான ‘பிளாக் வாரண்ட்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ சீரிஸூக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் இணைந்துள்ளது.

ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களிலும் சாந்தினி, ஷ்யாமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சந்த், தீரஜ் மற்றும் ஹேமா ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

தமிழ் ஒரிஜினல்ஸை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக இந்தக் கதையில் கூர்மையான கதை சொல்லல் மற்றும் டைம்லி தீம்ஸ் இடம் பெற்றுள்ளது.

நெட்ஃபிலிக்ஸ் இந்தியா கண்டெண்ட் வைஸ் பிரெசிடெண்ட், மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டவை: “இந்த வருடம் எங்களின் முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’.

இந்தக் கதை புதுமையாகவும் பார்வையாளர்களுடன் பொருந்திப் போகும் விதமாகவும் இருக்கும்.

ஒரு பெண் கேம் டெவலப்பர் தனக்கு எதிராக ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுவதைப் பின்தொடரும் ஒரு பரபரப்பான மிஸ்ட்ரி த்ரில்லர் கதை இது.

இந்தத் தொடர், சமகால டிஜிட்டல் வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு உருவாகியுள்ளது” என்றார்.

இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா: “இந்தக் கதை வெறும் த்ரில்லர் மட்டுமல்ல! இது நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பு. நம் வாழ்க்கைத் திரைகள், ரகசியங்கள் மற்றும் மாறிவரும் நம்பிக்கைகளில் சிக்கியுள்ளது.

இறுதியில் மக்கள், அவர்களின் தேர்வுகள், பாதிப்புகள் மற்றும் உண்மைக்கும் ஏமாற்றுதலுக்கும் இடையிலான பலவீனமான கோடு பற்றிய கதையாகவும் இது இருக்கும்” என்றார்.

Comments (0)
Add Comment