தங்கலானுக்காக விக்ரம் குரலில் வெளியான 3வது பாடல்!

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஸ்டுயோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர்  மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் கோலார் தங்க வயல் பகுதிகளில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள தங்கலான் படத்திற்கு மிகவும் வித்தியாசமாக இசையமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

இந்தப் படத்தின் முதல் பாடலான ‘மினுக்கி மினுக்கி’ பாடல். இரண்டாவது பாடலான ‘தங்கலானே’ பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மக்களின் கவனம் பெற்றன.

அதன் தொடர்ச்சியாக ‘தங்கலான்’ படத்தின் மூன்றாவது பாடலான ‘அறுவடை…’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அறுவடை சமயத்தில் விவசாயிகள் அலுப்பு தெரியாமல் இருக்க, பாட்டு பாடிக் கொண்டே அறுவடை செய்வார்கள்.

அப்படி அறுவடை செய்துகொண்டே காதலியைப் பார்த்து பாடும் வகையில் ‘தங்கலான்’ படத்தின் இப்பாடல் அமைந்துள்ளது.

கவிஞர் உமாதேவி எழுயுள்ள இந்தப் பாடலை விக்ரம், சிந்தூரி விஷால், சுகந்தி, மதிச்சயம் பாலா உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர். 

ஓ போடு, எக்ஸ்க்யூஸ் மி, மியாவ் மியாவ் உள்ளிட்ட ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள நடிகர் விக்ரம் குரலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கலான் படத்தின் அறுவடை பாடல் வெளியாகி உள்ளதால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

#இசையமைப்பாளர்_ஜி_வி_பிரகாஷ் #நடிகர்_விக்ரம் #பா_ரஞ்சித் #பசுபதி #பார்வதி_திருவோத்து #மாளவிகா_மோகனன்  #vikram #chiyaanvikram #paranjith #malavikamohanan #parvathy #thangalaan #thanglaan3rdsingle #3rd_single #chiyaanvikram #vikrammovie #kollywood #Aruvadai #GV_Prakash #Thangalaan_3rd_Single
#Thangalaan_Aruvadai_Song 

Comments (0)
Add Comment