சூர்யா – 45: தலைப்பை வெளியிட்ட படக்குழு!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து இக்கதை உருவாகப்பட்டுள்ளதாகக் தகவல்கள் கூறப்படுகிறது.

இதில், த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா போன்றோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவை, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று, இறுதிக்கட்டத்தை நோக்கியுள்ளது.

இதில், சூர்யாவுடன் த்ரிஷா நடனமாடும் பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தை இந்தாண்டு தீபாவளித் திருநாளுக்குத் திரைக்குக் கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்திற்கு ‘பேட்டைக் கருப்பன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comments (0)
Add Comment