கவனம் குவித்த ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ பாடல்!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ என்ற படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

கிருஷ்ணன் ஒளிப்பதிவில், தமன் இசையில் படம் தயராகியுள்ளது.

‘மாநகரம்’, ‘ராயன்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்த சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். பரியா அப்துல்லா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோகி ஜாபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘சிக்மா’ படம் உலகம்  முழுவதும் ஜூலை 31-ந்தேதி திரைக்கு வருகிறது.

இதற்கிடையில் படத்தில் இருந்து ‘சிக்மா ஸ்டைல்’… என்ற புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.

இதில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லாவுடன் ஜேசன் சஞ்சய் இணைந்து நடனம் ஆடியுள்ளார். 

இதில், ‘பதவி மேல் ஆசையில்லை. என்ன வேண்டுமோ எல்லாம் கிடைக்கும். வழி தனி வழி அந்த ஆண்டவன் என் பக்கம், குனியாது தல நெவர், எவர் எவனுக்கும்’ போன்ற வரிகள் கவனம் ஈர்த்துள்ளன.

Comments (0)
Add Comment