உருவாகிறது ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ இரண்டாம் பாகம்!

கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த டேனி பாய்ல் இயக்கத்தில் தேவ் படேல், ஃபிரீடா பின்டோ, அனில் கபூர், இர்பான் கான் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் உலகளவில் சுமார் 400 கோடி ரூபாய் வசூலித்தது.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் 8 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. இதற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.

இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் டிவி உரிமையை, லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ‘பிரிட்ஜ் 7’ என்ற நிறுவனத்தின் ஸ்வாதி ஷெட்டி, கிரான்ட் கெஸ்மேன் ஆகியோர் பெற்றுள்ளனர்.

இது குறித்து பேசிய டிவி உரிமையாளர் ஸ்வாதி ஷெட்டி, “சில கதைகள் எப்போதும் நம் மனதில் தங்கும். ஸ்லம்டாக் மில்லியனர் படம் அதில் ஒன்று. அதன் விவரிப்பு உலகளாவியது, கலாச்சார மற்றும் எல்லைகளைத் தாண்டி, நாம் விரும்பும் வகையான கதையை கொண்டது” என்று ஸ்வாதி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

#டேனி_பாய்ல் #Danny_Boyle #தேவ்_படேல் #Dev_Patel #ஃபிரீடா_பின்டோ #Freida_pinto #அனில்_கபூர் #Anil_kapoor #இர்பான்_கான் #Irfan_khan #ஸ்லம்டாக்_மில்லியனர்_2 #Slumdog_millionaire_2 #ஏஆர்_ரஹ்மான் #AR_Rahman #பிரிட்ஜ்_7 #Bridge_7 #ஸ்வாதி_ஷெட்டி #Swathi_shetty #கிரான்ட்_கெஸ்மேன் #Grant_geissman

Comments (0)
Add Comment