20 ஆயிரம் பாடல்களைத் தாண்டி நீளும் சித்ராவின் இசைப்பயணம்!

திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா.

“சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா” பாடல், பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில் சித்ரா என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

இவர் முதன் முறையாக இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

‘டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப் டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் உள்ள‌ ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 8, சனிக்கிழமை மாலை நடைபெற உள்ளது.

இதற்கான நுழைவுச் சீட்டுகள் இன்ஸைடர் டாட் இன் மற்றும் புக் மை ஷோ இணையதளங்கள் மற்றும் செயலிகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்துப் பேசிய பாடகி சின்னக்குயில் சித்ரா,  இந்த இசை நிகழ்ச்சி 3 மணி நேரம் நடைபெற உள்ளதாகக் கூறினார்.

மது பாலகிருஷ்ணன், சத்ய பிரகாஷ், திஷா பிரகாஷ், ருபா ரேவதி என நான்கு பாடகர்கள் என்னுடன் (சித்ரா) இணைந்து பாடவுள்ளனர்.

#பாடகி_சித்ரா #Singer_Chithra #இசை_நிகழ்ச்சி #Music_concert #சென்னை #Chennai #நந்தனம்_ஒய்எம்சி #Nandhanam_ymc #பத்திரிக்கை_சந்திப்பு #Press_meet  #E_Lounge_Events #வெங்கட் #Venkat #கனரா_வங்கி #Canara_bank #டைம்லெஸ்_மெலோடிஸ்_ஆஃப்_எ_லைஃப்டைம்_கேஎஸ்_சித்ரா #Timeless_melodies_of_a_lifetime_ks_chithra_live_in_concert 

Comments (0)
Add Comment