ஷாருக்கானுக்குக் கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்!

அம்பானி இல்லத் திருமணத்துக்கு முந்தைய விழாவில் இட்லி, வடை ராம் சரண் எங்கே இருக்கிறாய் என அழைத்த நடிகர் ஷாருக்கானுக்கு ஒப்பனைக் கலைஞர் ஷெபா ஹசம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்பானி இல்லத் திருமண விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர்கான் நடனம் ஆடி பார்வையாளர்கள் மகிழ்வித்தனர்.

அப்போது ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்த ராம் சரணை நடனமாட ஷாருக்கான் அழைத்த விதம் சர்ச்சை ஆகியுள்ளது.

இட்லி வடை ராம் சரண் எங்கே இருக்கிறாய் என கிண்டலாக ஷாருக்கான் அழைத்தது அவமரியாதையான செயல் என ஒப்பனை கலைஞர் ஷெபா ஹெசம் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது சமூக வலைதளத்தில், ஷாருக்கானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஷெபா ஹெசம், ஷாருக்கானின் பேச்சில் உடன்பாடு இல்லாததால், உடனடியாக விழா அரங்கில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஷெபா ஹெசம் தெரிவித்த கண்டனம், இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்களும் ஷாருக்கானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment