ஒளிப்பதிவாளர்களே வியந்து பார்க்கும் ஒளிப்பதிவாளர்!

தமிழ் சினிமாவில், திரைமொழியில் நிறைய மாற்றங்களை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். அதற்கு காட்சி ஒளிப்பதிவின் மூலம் பெரும் பங்காற்றினார் ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட்  திரைத்துறையினரான நாங்கள் இவரை மாஸ்டர் என்றே அன்புடன் அழைப்போம்.

தமிழில் தொழில்நுட்பங்களுக்காகப் பேசப்பட்டவர் இயக்குநர் ஸ்ரீதர்.

குறிப்பாக அவரது படங்களில் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. ‘தேன்நிலவு’ படத்தில் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் காஷ்மீரின் அழகை கருப்பு வெள்ளையில் அற்புதமாக படமாக்கியிருந்தார்.

ஜங்லீ என்ற இந்தி படம் ஒன்றில் அதே காஷ்மீரின் அழகை வர்ணத்தில் காட்சிப்படுத்திய போதும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியிருப்பார்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. ‘கல்யாணப் பரிசு’, ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற பல திரைப்படங்களில் டிராலியுடன் கிரேன் அசைவுகளை உட்புறக்காட்சியில் நவீனத்தன்மையுடன் உருவாக்கினார்.

“சொன்னது நீதானா…” பாடல் காட்சியில் கேமிரா டாப் ஆங்கிளில் இருந்து இறங்கி முத்துராமன் அமர்ந்திருக்கும் கட்டிலுக்கு அடியில் சென்று அந்தப் புறமாக எழுந்து மேலே செல்கின்ற வித்தையை ஒளிப்பதிவாளர்களே இன்றும் வியந்து பார்க்கிறார்கள்.

ஒளியமைப்பிலும், ரெம்ப்ரண்ட் பட்டர்ஃப்ளை லைட்டிங் முறையை பெரும்பாலும் பின்பற்றினார்.

தேர்ந்தெடுத்த திரைப்படங்களின் பட்டியல்.

• 1976 ரோஜாவின் ராஜா
• 1975 அவன் ஒரு சரித்திரம்
• 1974 அக்கரைப் பச்சை
• 1973 வசந்த மாளிகை
• 1971 சவாலே சமாளி
• 1965 எங்க வீட்டு பிள்ளை
• 1962 சுமைதாங்கி
• 1961 புனர் ஜென்மம்
•1961 தேன் நிலவு
• 1961 நெஞ்சில் ஓர் ஆலயம்
• 1960 மீண்ட சொர்க்கம்
• 1960 எல்லோரும் இந்நாட்டு மன்னர்
• 1960 விடிவெள்ளி
• 1959 கல்யாண பரிசு
• 1958 உத்தம புத்திரன்
• 1957 யார் பையன்
• 1956 அமர தீபம்

– நன்றி: சி.ஜெ. ராஜ்குமார் கேமரா கண்கள் என்ற நூலில் இருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment