பாகுபலி அனிமேஷனுக்குக் குரல் கொடுக்கும் சரத் கெல்கர்!

டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார் மற்றும் கிராஃபிக் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்தியாவில் அனிமேட்டட் சீரிஸை சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கிறது.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் பாகுபலி: க்ரௌன் ஆஃப் பிளட் (இரத்தத்தின் மணிமகுடம்) என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இக்கதையில் மகிழ்மதி நாட்டையும் அரியணையையும் அதன் மிகப்பெரிய எதிரியான ரக்ததேவா என்ற பெயர் கொண்ட பயங்கரமான  பல்லாலதேவாவும் கைகோர்த்துள்ளனர்.

இந்த நிலையில், பாகுபலி: கிரௌன் ஆஃப் பிளட் என்ற சீரிசுக்கு நடிகர் சரத் கெல்கர் பின்னணிக் குரல் கொட்டுத்துள்ளார்.

மிகச்சிறப்பான நடிப்புத் திறனுக்கும் பல பிரபலமான திரைப்படங்கள் சீரிஸ்களுக்கு பின்னணிக் குரல் கொடுப்பதற்காகவும் நாடெங்கிலும் பரவலாக அறியப்படுபவராக திகழ்கிறார் நடிகர் சரத் கெல்கர்.

பாகுபலி சீரிஸின் பிரபல கதாநாயகனான பிரபாசுக்கு பின்னணிக் குரல் கொடுத்ததற்காக சரத் கெல்கர் பாராட்டையும், புகழையும் பெற்றிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய சரத் கெல்கர் “டப்பிங் பணியை நான் சிறப்பாக செய்கிறேன். ஆனால், ஒரு நல்ல குரல் தேவைப்படுகின்ற ஒரு குறிப்பிட்ட வகையான கதாபாத்திரத்திற்கு மட்டுமே அதனை நான் செய்வேன் என்று அர்த்தமில்லை.

முதலில் நான் ஒரு நடிகர். நான் சிறப்பாக நடிக்கக்கூடியவன். எனது குரலைப் பொறுத்தவரை எந்தவொரு பரிமாணத்திற்கும் அதனை என்னால் எடுத்துச்செல்ல முடியும்.

ஆனால், அதிஷ்டவசமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நபர்கள் என்னிடம் ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

ஒரே மாதிரியான முத்திரை என் மீது குத்தப்படாமல் இருப்பதற்காக, வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும், பின்னணி குரல் கொடுக்கவும் நான் முயற்சி செய்கிறேன்.

நல்ல நேரங்கள் வருவதற்காக நான் காத்திருக்கிறேன். சிறப்பானது நிச்சயமாக வரும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

பாகுபலி பற்றி பேசும்போது, “பாகுபலியின் குரலாக என்னை ஆக்கியதற்கான அனைத்துப் புகழும், பெருமையும் அதன் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி சாருக்கே உரித்தானது. பின்னணி குரல் கொடுக்கும் முழு சுதந்திரத்தையும் எனக்கு அவர் தந்தார். பாகுபலி முதல் பகுதியின்போது மாலை நேரங்களில் வந்து டப்பிங்கை சரிபார்ப்பார்.

பாகுபலி இரண்டாவது பகுதி டப்பிங் பணி நடைபெறும்போது அவர் வரவேயில்லை. என் மீது முழுமையான நம்பிக்கை வைத்து “உங்களது பணியை நீங்கள் செய்யுங்கள்” என்று சொல்லி விடுவார்,” என்று தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தார்.

குறிப்பு: பாகுபலி: கிரௌன் ஆஃப் பிளட் இப்போது டிஷ்னி பிளஸ், ஹாட்ஸ்டாரில் மட்டும் ஸ்ட்ரீம் ஆகிறது.

Comments (0)
Add Comment