கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் ரசிர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.
எம்.எஸ். அர்ஜூன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா, ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், ஹரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.
‘சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும்’ படம் டிசம்பர் 13-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், சூது கவ்வும் – 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சந்தோஷ் நாராயணன், “ரஞ்சித்துக்கு இனிமேல் எல்லாப் படங்களுக்கும் நான்தான் இசையமைப்பேன். வேற யாருக்கும் இதை விட்டுத் தரமாட்டேன். இது ஒரு கட்டளை” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இயக்குநர் பா. ரஞ்சித்திற்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் மனக்கசப்பு இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.