‘சூர்யா 45’ – வில்லனாகக் களமிறங்கும் ஆர்.ஜே. பாலாஜி?

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில், கடந்த நவம்பர் மாதம் வெளிவந்த கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் போனது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இப்படத்திற்கு பிரபல ஆசை பாடல் புகழ் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளார்.

20 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சூர்யா – திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி உள்ளது.

மேலும், இப்படத்தில் லப்பர் பந்து புகழ் நடிகை சுவாசிகா, பிரபல நடிகர் இந்திரன்ஸ், நடிகர் யோகி பாபு, நடிகை சிவாதா, நட்டி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதில், ஆர்.ஜே. பாலாஜி வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்தப் பாத்திரம் வில்லம் பாத்திரமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.   

இதுகுறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment