‘வேட்டையனு’க்காகக் ‘குரல்’ கொடுத்த நடிகை ரித்திகா சிங்!

தமிழில் ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதனைத் தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்தார்.

சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நடித்திருந்தார். துல்கரின் ‘கிங் ஆஃப் கொத்தா’ படத்தில் கலாபக்காரன் பாடலில் சிறப்புத் தோற்றத்தில் பங்கேற்று நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில், ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்  நடித்துள்ள வேட்டையன் படத்திலும் நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார்.

இதில், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே இதன் டப்பிங் பணிகளை ஃபக்த் பாசில், துஷாரா விஜயன் முடித்துள்ள நிலையில், நடிகை ரித்திகா சிங் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்தப் படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment