மாஸ் அவதாரத்தை விட்டு விலகிய ரவி தேஜா!

‘மாஸ்  மகாராஜா’ என்று அழைக்கப்படும் தெலுங்கு நடிகரான ரவி தேஜா, மாஸ் அவதாரத்தை விட்டு விலகி நடித்துள்ள படம் ‘இருமுடி கட்டு’.

இதில் பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, சுவாசிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.

“மகளை உயிராக நேசிக்கும் அப்பா, கோபம் நிறைந்த மனிதர், தனது மகளின் வேண்டுகோளுக்காக மது பழக்கத்தைக் கைவிட்டு ஐயப்பனின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஆன்மிக மனிதர் என 3 விதமான தோற்றங்களில் ரவி தேஜா இதில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் உறவுகள், தனிமனித மாற்றங்கள், மனித வாழ்க்கையின் உணர்ச்சிமிக்க பரிமாணங்களை மையமாகக் கொண்டுள்ளது.

இது வெறும் பக்தியின் அடையாளமாக மட்டுமல்லாமல், மனிதனின் உணர்வு மற்றும் ஆன்மிக மாற்றப் பயணத்தையும் குறிக்கிறது” என்று படக்குழு கூறியுள்ளது.

Comments (0)
Add Comment