புஷ்பா-2 : BTS புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா!

சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவாகி இருக்கும்  திரைப்படம் ‘புஷ்பா 2’. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் ஃபகத் ஃபாசில்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

இதில், இடம்பெறும் சிறப்புப் பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாடி இருக்கிறார்.

புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்தப் படம் முன்பதிவில் மட்டுமே ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் BTS புகைப்படங்களை நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments (0)
Add Comment