கவனம் ஈர்த்த ‘குபேரா’ ராஷ்மிகாவின் தோற்றம்!

தனுஷின் 50-வது படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரது 51-வது படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’, ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் நடிக்கின்றனர்.

அண்மையில் வெளியான இப்படத்தின், தனுஷின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தற்போது ராஷ்மிகாவின் தோற்றத்தை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது.

‘குபேரா’ படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் தோற்றம்:

இரவில் யாரும் இல்லாத பகுதியில் கடப்பாரை கொண்டு பூமியைத் தோண்டுகிறார் ராஷ்மிகா. தொடர்ந்து அங்கிருந்து சூட் கேஸ் ஒன்றை எடுக்கிறார்.

அதை திறந்துப் பார்த்தால் அதில் முழுக்க பணம் நிறைந்து கிடக்கிறது. அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். 48 நொடிகள் ஓடும் இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

#ராஷ்மிகா_மந்தனா #Rashmika_Mandanna #தோற்றம் #Look #தனுஷ் #Dhanush #குபேரா #Kubera #இயக்குநர்_சேகர்_கம்முலா #Director_Sekhar_Kammula #நாகர்ஜூனா #Nagarjuna

Comments (0)
Add Comment