நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா!

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருந்து வருகிறார்.

அவர் ஒரு படத்திற்கு 10 முதல் 12 கோடி வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே புதிய பாலிவுட் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நயன்தாராவின் சம்பளத்தை மிஞ்சியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிக்கந்தர்’ படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்.

இந்தப் படத்திற்காக அவர் 13 கோடி ரூபாயை சம்பளமாக பெற உள்ளார். இந்தச் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘சிக்கந்தர்’ படத்தின் படப்பிடிப்பை வரும் வாரத்தில் மும்பையில் தொடங்க உள்ளது.

நதியாத்வாலா கிராண்ட்சன் எண்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த அதிரடி பொழுதுபோக்கு திரைப்படம் 2025-ல் ஈத் அன்று திரைக்கு வர உள்ளது.

– தேஜேஷ்.

Comments (0)
Add Comment