காதலனைக் கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலரை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’ போன்றப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இவர் பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி என்பவரை நீண்டநாளாக காதலித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்‍கு முன்புதான் இந்த ஜோடி காதலை அறிவித்தது. அடுத்த மாதம் வரும் பிப்ரவரி 22ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment