கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ்.
பான் இந்தியப் படமாக உருவாகி இருந்ததால் வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்றது இந்தப் படம்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ‘புஷ்பா தி ரூல்-2’ திரைப்படம் உருவாகிறது. அண்மையில் இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது.
இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பில் தாமதம், சில பிரச்னைகள் போன்ற காரணங்களால் வெளியிட்டுத் தேதி தள்ளிப் போனது.
இந்த நிலையில், ‘புஷ்பா தி ரூல்-2’ டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரம் ரூ.1000 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில், அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமை ரூ.660 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
இந்தியாவில் மட்டும் இதன் வெளியீட்டு உரிமையை 550 கோடிக்கும் வெளிநாடுகளில் 150 கோடிக்கும் திரையரங்க உரிமை விற்பனையாகி உள்ளது.
மேலும் சாட்லைட் உரிமை, இசை உரிமை உட்பட பல கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது ‘புஷ்பா-2’ திரைப்படம். ஓடிடி உரியையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இத்தனை கோடிகள் விற்பனையாகி உள்ளது. படம் வெளிவந்த பின்னர் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.