இசையமைப்பாளர் – கவிஞர்- டைரக்டர் என பன்முகத்தன்மை கொண்ட கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள்.
மூத்த மகன் வெங்கட் பிரபு, நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆகி, இப்போது இயக்குநராக தமிழில் ஜொலிக்கிறார். இளைய மகன் பிரேம்ஜி , காமெடி நடிகர்.
‘வல்லவன்’ படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் பிரேம்ஜி. சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் பிரேம்ஜிக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு.
இப்போது விஜய் ஹீரோவாக நடிக்க, வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கோட்’ என்ற படத்தில் பிரேம்ஜி நடித்து வருகிறார்.
44 வயதாகும் பிரேம்ஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை பிரேம்ஜி, புத்தாண்டு அன்று தெரிவித்தார்.
தனது சமூக வலைத்தளத்தில், ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரேம்ஜி, ‘இந்த ஆண்டு நான் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மணப்பெண் யார் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
ஆனாலும் அவர் யார் என இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணின் பெயர் வினிதா சிவகுமார். பின்னணிப் பாடகி. வயது 22.
ஆம். பிரேம்ஜியை விட 22 வயது இளையவர். சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று, தானும், பிரேம்ஜியும் காதலிப்பதை பகிரங்கமாக தனது, சமூக வலைத்தளத்தில் வினிதா, பதிவிட்டிருந்தார்.
விரைவில் காதலர்கள் ஊடகங்களை நேரில் சந்தித்து, தங்கள் திருமண செய்தியை அறிவிப்பார்கள் என தெரிகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.