கஜோலுடன் மீண்டும் பிரபுதேவா!

27 ஆண்டுகளுக்குப் பின் இணைகிறார்கள்!

1997 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மின்சார கனவு’ தமிழ் திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவாவும், இந்தி நடிகை கஜோலும் இணைந்து நடித்திருந்தனர்.

ராஜீவ் மேனன் டைரக்டு செய்திருந்த இந்தப் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருந்தார். இதன் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த படத்தின் மூலம் கஜோல், தமிழக ரசிகர்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்தார்.

27 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவும், கஜோலும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இது, இந்தியில் தயாராகிறது. பெரும் பட்ஜெட் செலவில் ஆக்ஷன் த்ரில்லராக இந்த படம் உருவாகி வருகிறது.

இந்தப் படம் மூலம், பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் உப்பலபதி ‘பாலிவுட்’டில் எண்ட்ரியாகிறார். ஆம். அவர் இயக்கும் முதல் இந்திப்படம் இது. இதில், நசிருதீன் ஷா, சம்யுக்தா மேனன், ஜிஷு சென்குப்தா மற்றும் ஆதித்யா சீல் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

‘மின்சார கனவு’ படத்தில் இணைந்து நடித்த பிரபுதேவா-கஜோல் ஜோடி தற்போது மீண்டும் இணையும் செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

#பிரபுதேவா  #கஜோல் #நசிருதீன்_ஷா #சம்யுக்தா_மேனன் #ஜிஷு_சென்குப்தா #ராஜீவ்_மேனன் #ஏ_ஆர்_ரஹ்மான் #Prabhu_Deva #Kajol #Nasiruddin_shah #Samyukta_Menon #Jishu_Sengupta #Rajeev_Menon #A_R_Rahman

KajolPrabhu_Devaகஜோல்பிரபுதேவா
Comments (0)
Add Comment