‘நாகபந்தம்’ படப்பிடிப்பைத் துவங்கி வைத்த சிரஞ்சீவி!

அபிஷேக் நாமா, கதை, திரைக்கதை, எழுதி இயக்கும் படத்துக்கு ‘நாகபந்தம் – தி சீக்ரெட் ட்ரெஷர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை, அபிஷேக் பிக்சர்ஸ், தண்டர் ஸ்டூடியோவுடன் இணைந்து தயாரிக்கிறது.

ஆன்மிகம் மற்றும் சாகசங்கள் நிறைந்த படமான இதற்கு சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். அபே இசை அமைக்கிறார். இதன் டைட்டில் டீஸர் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதில் மர்மமான அகோரியாக கே.ஜி.எஃப் அவினாஷ், கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது. மிரட்டும் விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன் வெளியான இந்த டீஸர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்துத் துவக்கி வைக்க, யாதவ் தலாசினி கேமராவை இயக்க, முதல் காட்சி படமாக்கப்பட்டது.

இந்த முதல் காட்சியை இயக்குநர் அஜய் பூபதி படமாக்கினார். ஏசியன் சுனில் இதற்கான கதை, திரைக்கதையை மேற்கொள்கிறார்.

மிகப் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகி வரும் இந்த நாகபந்தம் படம் பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment