என்னைக் கவர்ந்தவர் எம்.ஜி.ஆர். மட்டும் தான்!

– நடிகர் ராமராஜன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ராமராஜன் நடித்த படம் சாமானியன். கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்தப் படம் தமிழகம் முழுவதும் பரவலாக திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் உள்ள ஒரு திரையரங்கில், சாமானியன் படத்தின் 35-வது நாள் விழாவையொட்டி ரசிகர்களை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், படத்தின் நாயகன் ராமராஜன் வருகை பங்கேற்றார்.

அப்போது ராமராஜனுக்கு ரசிகர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு வந்த குழந்தைகளிடம் ராமராஜன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய ராமராஜன், நான் திரையரங்கில் வேலைப் பார்த்துள்ளேன். அப்போது தினமும் 3, 4 காட்சிகளைப் பார்ப்பேன். அனைத்து நடிகர்கள் நடித்த படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னைக் கவர்ந்தவர் எம்.ஜி.ஆர். மட்டும் தான்.

எம்.ஜி.ஆரைத் தான் நான் முன்னுதாரணமாக எடுத்து படத்தில் நடித்திருக்கிறேன். அதனால் தான் எத்தனைக் கோடி கொடுத்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்காத காட்சிகளில் நான் நடித்ததில்லை.

மக்களையும் என்னையும் எப்பொழுதும் பிரிக்க முடியாது. டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது. இதனால், தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முதலமைச்சரும் டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டும்.

திரையரங்கில் முதல் ரோலில் இருப்பவருக்கு ரூ. 50 டிக்கெட் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment