‘ஜெய்பீம்’ போல கிளாசிக்கான படம் ‘அமரன்’!

நடிகை ஜோதிகா புகழாரம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான  ‘அமரன்’ திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

இதில் முகுந்த் வரதராஜன் மனைவி இந்து ரெபக்கா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

இந்நிலையில் அமரன் படத்தைப் பார்த்து, சாய் பல்லவியின் நடிப்பை, நடிகை ஜோதிகா பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் சினிமாவில் ஜெய்பீம் படத்துக்குப் பிறகு இன்னொரு கிளாசிக் படம் அமரன்.

இப்படத்தின் கடைசி 10 நிமிடத்தில் சாய் பல்லவி நடிப்பு என் இதயத்தை வென்றுவிட்டது. சாய் பல்லவியை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment