யோகிபாபுவின் எண்ணம் ஈடேற இனிய வாழ்த்துகள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகிபாபு, கதையின் நாயகனாகவும் படங்கள் நடித்தும் வருகிறார்.

தற்போது, சர்வதா சினி கரேஜ், ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில், அமுதா சாரதி எழுதி இயக்கியுள்ள ‘சன்னிதானம் பி.ஓ.’ படத்தில் நடித்திருக்கிறார்.

சித்தாரா, கஜராஜ், வர்ஷா நடித்துள்ள இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

இருமுடி கட்டிச் செல்லும் தனது சிறுவயது மகனை சபரிமலையில் தொலைக்கும் வாய்ப் பேச முடியாத சித்தாராவின் பாசப் போராட்டமாக இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது.

இந்தப் படம் பற்றிப் யோகிபாபு, “நகைச்சுவையைவிட எமோஷனல் காட்சிகளில் நடிப்பது மிகவும் சவாலானது.

காமெடியனாக என்னைப் பார்த்த கண்களுக்கு, குணச்சித்திர நடிப்பைக் காட்டி அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பது பெரிய விஷயம்.

என்னைப் பொறுத்தவரை கிடைத்த படமெல்லாம் நடிப்பது என் நோக்கமல்ல. நடிக்கும் படங்களில் எல்லாம் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம்.

இறைவன் மேல் பாரத்தைப் போட்டு என் பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன்” என்று உருக்கமாகப் பேசுகிறார்.

தொடர்ந்து நல்ல படங்கள் கிடைத்து வெகுஜன மக்களின் நாயகனாக உருவாக யோகிபாபுவுக்கு வாழ்த்துகள்.

Comments (0)
Add Comment