விஜய் எனக்குப் போட்டி இல்லை!

ரஜினிகாந்த் சொன்ன விளக்கம்

லைகா நிறுவனம் தயாரிக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘சூப்பர்ஸ்டார்’  ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு கவுரவ வேடம்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் நடித்துள்ளார்.

‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று ரஜினிகாந்த் பேசினார்.
அவரது பேச்சின் சுருக்கம்:

“நடிகர் விஜய் என் கண் முன்னால் வளர்ந்த பையன். அவரை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன்.

‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பின் போது விஜய்யின் தந்தை என்னிடம் வந்து, ’என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்கலாம் ‘என என்னை சொல்லும்படி சொன்னார்.

அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து, தனது திறமையால் உயர்ந்து உள்ளார். நன்றாக நடித்து வருகிறார்.

விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது கவலை அளிக்கிறது. அவரும் மேடையில் ‘எனக்கு போட்டி நான் தான்’ என கூறியுள்ளார்.

நானும் அதையே தான் சொல்கிறேன். அதனால் நடிகர் விஜய், எனக்கு போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை. நானும் விஜய்க்கு போட்டி நினைத்தால், அவருக்கும் மரியாதை இல்லை.

தயவுசெய்து என்னுடைய ரசிகர்களும், அவருடைய ரசிகர்களும் ‘காக்கா, கழுகு’ கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’.

பின்னணி பாடகி பவதாரிணியின் மறைவுக்கு மேடையில் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தார்.

மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த நினைவுகளையும் ரஜினி பகிர்ந்து கொண்டார்.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment